செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 5 நவம்பர் 2020 (22:12 IST)

78 வயது முதியவரை மணந்த 17 வயது பெண்.... ஏற்கனவே கர்ப்பம்... விவாகரத்து கேட்டு நோட்டீஸ்!!!

இந்த உலகில் சில ஆச்சர்யங்களும் அதிசயங்களும் அன்றாடமும் நடந்துகொண்டு வருகின்றது.

ஆனாலும்  இந்தோனேஷியாவில் ஒரு  நடந்துள்ள சம்பவம் எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்நாட்டில் 78 வயது முதியவர் ஒருவர் 17 வயது சிறுமியை மணந்துகொண்டார். இவர்களுக்கு இடையே வயது வித்தியாசம் அதிகமிருந்ததால் பலரும் இதுகுறித்து கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் திருமணமாகி சுமார் 22 நாட்களிலேயே மனைவி தன்னை ஏமாற்றியதாகக் கூறி  முதியவர் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது திருமணத்திற்கு முன்பே தனது மனைவி கர்ப்பமாக இருந்துள்ளதாகவும் அதை மறைத்து தன்னை திருமணம் செய்துகொண்டதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.