பிறந்த சில நாட்களில் 12 குழந்தைகள் உயிரிழப்பு...

afkanistahn
Last Modified செவ்வாய், 6 நவம்பர் 2018 (13:02 IST)
ஆப்கானிஸ்தான் நாட்டில் வடகிழக்கு மாகாணத்தில் பன்சீர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்து சில நாட்களே ஆன நிலையில் 12 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதால் அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்னும் சில குழந்தைகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
 
ஏற்கனவே 12 குழ்ந்தைகள் இறந்துள்ள நிலையில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.இதுகுறுத்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நோய் மேலும் பரவாமலிருக்கவே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
மேலும் 12 ம் குழந்தைகள் இறந்ததற்கான காரணம் பற்றி தெரியாமல் மருத்துவர்கள் குழப்பம் அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 


இதில் மேலும் படிக்கவும் :