புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By

பிறந்த அடுத்த நிமிடமே 8 லட்சம் ரூபாய் பரிசை வென்ற அமெரிக்க குழந்தை

அமெரிக்காவில் பிறந்த ஒரு குழந்தைக்கு பிறந்த அடுத்த நிமிடமே ரூ.8 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.

உலகம் முழுவதும் கிளைகளை கொண்ட பிரபல உணவு நிறுவனம் கே.எப்.சி, அதன் நிறுவனரான சாண்டர்ஸ் என்பவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஒரு போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. இந்த பிறந்த நாளில் 11 வகை மூலிகைகளைக் கொண்டு ஒரு புதுவிதமான சிக்கன் ஒன்றை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த சிக்கன் அறிமுகம் செய்யும் நாளில் பிறக்கும் முதல் அமெரிக்க குழந்தைக்கு ஹார்லண்ட் என்ற பெயர் வைத்தால் அந்த குழந்தைக்கு ரூ.8 லட்சம் என பரிசை அறிவித்தது.

இதன்படி அமெரிக்காவை சேர்ந்த அன்னா பில்சன் மற்றும் டெக்கர் பிலாட் என்ற தம்பதிக்கு பிறந்த குழந்தைக்கு ஹார்லண்ட் ரோஸ் என்ற பெயர் வைத்ததால் பிறந்த அடுத்த நிமிடமே இந்த குழந்தை கே.எப்.சியின் பரிசுக்கு தகுதி பெற்றது.

இந்த குழந்தைக்கு பரிசை நேரில் வந்து கொடுத்த கேப்சி நிறுவனத்தினர் அந்த குழந்தைக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். மேலும் சமூக வலைத்தள பயனாளிகளும் இந்த குழந்தைக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.