திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By Siva
Last Modified: ஞாயிறு, 21 மே 2023 (10:13 IST)

கள்ளச்சாராய மரணம் எதிரொலி: மதுராந்தகம் டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்..!

சமீபத்தில் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த சிலர் மரணமடைந்த நிலையில் இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து எட்டு பேர் உயிரிழந்த நிலையில் மதுராந்தகம் டிஎஸ்பி மணிமேகலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
மேலும் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து சிவசக்தி என்பவர் மதுராந்தகம் மாவட்டத்தின் புதிய டிஎஸ்பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 
Edited by Siva