1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 18 மே 2023 (18:35 IST)

கள்ளச்சாராய மரணங்களை கண்டித்து 20ஆம் தேதி ஆர்ப்பாட்டம்: பாஜக அறிவிப்பு..!

கள்ளச்சாராய மரணங்களை கண்டித்து வரும் 20ஆம் தேதி தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக பாஜக அறிவித்துள்ளது. 
 
சமீபத்தில் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் பரிதாபமாக பலியாகினர் என்பதும் மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். 
இந்த நிலையில் கள்ளச்சாராய வேட்டை தமிழகம் முழுவதும் காவல்துறை நடத்தியது என்பதும் நூற்றுக்கணக்கான நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
 
இந்த நிலையில் கள்ளச்சாராயத்தை தடுக்கும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுக வரும் 22ஆம் தேதி பேரணி நடத்தி ஆளுநரை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் தற்போது 20ஆம் தேதி கள்ளச்சாராயத்தை கண்டித்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் பாஜக மகளிர் அணி சார்பிலும் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Siva