வேலை கிடைக்குதுன்னா படுக்கையை பகிர்வதில் தப்பில்லை - பெண் டான்ஸ் மாஸ்டரின் சர்ச்சைப் பேச்சு

actor
Last Modified புதன், 25 ஏப்ரல் 2018 (11:23 IST)
சினிமாவில் சான்ஸ் கொடுத்தால் படுக்கையை பகிர்வது தப்பில்லை என பிரபல நடன இயக்குனர் சரோஜ் கான் கொச்சையாக பேசியுள்ளார்.
சமீபகாலமாக, சினிமாவில் பட வாய்ப்பிற்காக தங்களை படுக்கைக்கு அழைத்தனர் என பல நடிகைகள் புகார் கூறி வருகின்றனர். தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி இந்த விஷயத்தை பூதாகரமாக்கியுள்ளார். அவருக்கு ஆதரவாக பல முன்னாள் நடிகைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்று கூட இந்த விவகாரம் ஆந்திர சினிமா உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பிரபல பாலிவுட்  நடன இயக்குனர் சரோஜ் கான்(69), பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைப்பதில் தவறில்லை எனவும் அவ்வாறு அழைப்பதால் அவர்களுக்கு வேலை கிடைக்கிறது அல்லவா என்று தெரிவித்துள்ளார். 
saroj
தேசிய விருது வாங்கிய சரோஜ் கான் இப்படி கீழ்த்தரமாக பேசியிருப்பது சினிமா துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :