பிரசன்னாவுடன் அடுத்த படத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா

Last Modified செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (15:24 IST)
திருட்டுப் பயலே 2 படத்திற்கு பிறகு பிரச்சனா நடிக்கவிருக்கும் த்ரில்லர் படத்தில், நடிகை ஆண்ட்ரியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்  வெளியாகி உள்ளது.
பிரசன்னா நடிப்பில் கடைசியாக `திருட்டுப் பயலே 2' படத்தை அடுத்து த்ரில்லர் படமொன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. `விடியும் முன்'  படத்தை இயக்கிய பாலாஜி குமார் இயக்கிறார். இப்படம் ரசிகர்களுக்கு த்ரில்லாகவும்,  சஸ்பென்ஸாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில்  பிரசன்னாவுடன், நடிகை ஆண்ட்ரியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மடோனா செபாஸ்டியனுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அதோடு யோகி பாபுவும் இப்படத்தில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :