திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : புதன், 28 மார்ச் 2018 (16:53 IST)

சிரஞ்சீவி படத்தில் புதிய கெட்டப்பில் அமிதாப் பச்சன்: வைரல் புகைப்படம்

சிரஞ்சீவியின் 151-வது படமான சைராவில் நடித்துள்ள அமிதாப் பச்சனின் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
 
 
'கைதி நம்பர் 150' படத்தின் வெற்றியை அடுத்து சிரஞ்சீவி, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்து வீரப்போர் புரிந்த தெலுங்கு மன்னன் நரசிம்மரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார்.
 
இதில், அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு, சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா, நாசர் என பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தியில் இந்தப் படம் உருவாகிறது.
 
இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் அமிதாப் பச்சனின் புகைப்படம் இணையத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.