1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: வெள்ளி, 18 ஜூலை 2014 (15:16 IST)

வேகமெடுக்கும் வேந்தர் மூவிஸ்

வேந்தர் மூவிஸ் மணீடும் தீவிரமாக தமிழ் சினிமாவில் செயலாற்ற ஆரம்பித்துள்ளது. முதல்கட்டமாக நான்குப் படங்களின் கேரளா திரையரங்கு உரிமையை அந்நிறுவனம் பெற்றுள்ளது.
இன்று வெளியாகியிருக்கும் தனுஷின் வேலையில்லா பட்டதாரி, அடுத்த வாரம் வெளியாகவிருக்கும் ஜிகிர்தண்டா, ஜெயம் ரவியின் பூலோகம், விஷாலின் பூஜை ஆகியவைதான் அந்த நான்குப் படங்கள். இந்தப் படங்களின் கேரள திரையரங்கு உரிமையை வேந்தர் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.
 
அத்துடன் விஷால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கவுள்ள பெயரிடப்படாதப் படத்தையும் வேந்தர் மூவிஸ் தயாரிக்கிறது. தொடர்ந்து தயாரிப்பிலும், பட விநியோகத்திலும் கவனம் செலுத்தயிருப்பதாக வேந்தர் மூவிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.