1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha priya
Last Modified: வியாழன், 11 செப்டம்பர் 2014 (15:52 IST)

விக்ரம் பிரபுவை பாராட்டிய அஜீத்

பொது நிகழ்ச்சிகள், படவிழாக்கள் எதிலும் கலந்து கொள்வதில்லை அஜீத். அதேபோல் பார்ட்டிகளிலும் அவரை பார்க்க முடியாது. இப்படி ஒதுங்கி இருப்பதால் திரையுலகில் உள்ள பிறரை அவர் பாராட்டுவதற்கான வாய்ப்பும் ஏற்பட்டதில்லை. 
ஆனால் ரஜினி அஜீத்துக்கு நேர்எதிர். ட்ரெய்லர் நன்றாக இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் வேண்டப்பட்டவர்கள் என்றால் போனில் அழைத்தாவது பாராட்டுவார். அந்த பண்பை அஜீத்தும் இப்போது தொடங்கியுள்ளதுதான் சிறப்பு. 
 
அப்படி என்ன நடந்தது?
 
விக்ரம் பிரபு சிகரம் தொடு படத்தில் நடித்திருக்கிறார் அல்லவா? அதன் பர்ஸ்ட் லுக் டீஸரைப் பார்த்த அஜீத், விக்ரம் பிரபுவை தொலைபேசியில் அழைத்து பாராட்டியிருக்கிறார். விக்ரம் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் அஜீத் பாராட்டியதை நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.
 
அஜீத்தின் இந்த புதிய குணம் தொடரட்டும்.