இளையராஜா இசையில் மீண்டும் பாடும் யுவன்!
இசையமைப்பாளர் இளையராஜா இசையில் மீண்டும் ஒரு பாடலை பாட உள்ளார் அவரின் இளைய மகன் யுவன் ஷங்கர் ராஜா.
தமிழ் சினிமாவில் அளப்பரிய சாதனைகளை செய்த ஜாம்பவான்களில் இளையராஜாவும் ஒருவர். இதுவரை 1400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள அவர் இப்போதும் பிஸியாக 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் அவர் இசையமைக்கும் ஒரு புதிய படத்தில் அவர் எழுதியுள்ள பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். இதற்கு முன்பாகவும் நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட சில படங்களில் இளையராஜா இசையில் யுவன் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.