ஓடிடியில் ரிலீஸ் ஆகும் அடுத்த தமிழ்ப்படம்: ஜூலை 10ல் ரிலீஸ் என அறிவிப்பு

cocktail
Last Modified ஞாயிறு, 28 ஜூன் 2020 (07:29 IST)
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் ரிலீசுக்கு தயாரான ஒருசில திரைப்படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. குறிப்பாக ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ மற்றும் கீர்த்திசுரேஷின் ‘பெண்குயின்’ ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது
இந்த நிலையில் தற்போது யோகிபாபு ஹீரோவாக நடித்த ‘காக்டெய்ல்’ திரைப்படமும் ஓடிடியில் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஜூலை 10ஆம் தேதி ஜீடிவியில் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. 4 திருமணமான நபர்கள் ஒரு காட்டுக்குள் சுற்றுலா சென்று அங்கு ஒரு அமானுஷ்ய சக்தியிடம் மாட்டிக் கொண்டு அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த படத்தில் யோகிபாபுவுடன் சாயாஜி ஷிண்டே, மைம் கோபி, சுவாமிநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
சாய்பாஸ்கர் இசையில் உருவாகியுள்ள இந்த இந்தப் படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா தயாரித்துள்ளார். யோகிபாபுவின் இந்த படம் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்இதில் மேலும் படிக்கவும் :