ஜோதிகா, கீர்த்தியை அடுத்து ஓடிடிக்கு வரும் வரலட்சுமி படம்

varalakshmi
ஜோதிகா, கீர்த்தியை அடுத்து ஓடிடிக்கு வரும் வரலட்சுமி படம்
Last Modified புதன், 24 ஜூன் 2020 (06:49 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. தற்போது நடைபெற்று வரும் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30ஆம் தேதிவரை நீடிக்கும் என்பதும் அதற்குப் பின்னரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக ரிலீசுக்கு தயாராக இருக்கும் பல திரைப்படங்கள் ரிலீஸாக முடியாமல் தத்தளித்து வருகின்றன. இதனை அடுத்து ஒரு சில படங்கள் வேறு வழியின்றி தியேட்டர்களில் ரிலீசாக முடியாததால் ஓடிடியில் ரிலீசாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்பாக ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தாள்’ மற்றும் கீர்த்தி சுரேஷின் ‘பெங்குவின்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் சமீபத்தில் ஓடிடியில் வெளிவந்தன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஜோதிகா, கீர்த்தி சுரேஷை அடுத்து வரலட்சுமி நடித்துள்ள படம் ஒன்றும் ஓடிடியில் ரிலீஸாக உள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஜோதிகா, கீர்த்தியை அடுத்து ஓடிடிக்கு வரும் வரலட்சுமி படம்
‘டேனி’ என்ற இந்த திரைப்படம் ஜீடிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக தற்போது விளம்பரம் வந்திருக்கின்றது. இருப்பினும் இந்த திரைப்படம் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை என்பதும் மிக விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது
வரலட்சுமி முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'டேனி திரைப்படத்தை இயக்குனர் சற்குணம் உதவியாளர் சாந்தமூர்த்தி என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்கும் வரலட்சுமி, ஒரு கொலைக்கு காரணமான மூன்று நபர்களை கண்டுபிடிப்பதுதான் கதை. வரலட்சுமி உதவியாக இந்த படத்தில் டேனி என்ற ஒரு நாய் நடித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :