1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (20:12 IST)

தனுஷைக் கழட்டி விடுவாரா கார்த்திக் சுப்பராஜ்?

தனுஷைக் கழட்டிவிட்டு, ரஜினி படத்தைத் தொடங்க கார்த்திக் சுப்பராஜ் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

 
‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’ மற்றும் ‘இறைவி’ படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்பராஜ். அதன்பிறகு தனுஷ் கால்ஷீட் தருவதாகச் சொன்னதால், வேறெந்த ஹீரோவுக்கும் கதை சொல்லாமல் பல மாதங்கள் காத்திருந்தார். மாதங்கள் வருடமாக, இனிமேல் தனுஷ் கால்ஷீட் தருவார் என்ற நம்பிக்கை பொய்த்துப் போனது.
 
எனவே, பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து ‘மெர்குரி’ படத்தை ஆரம்பித்தார் கார்த்திக் சுப்பராஜ். சைலண்ட் திரில்லர் படமான இதை, கார்த்திக் சுப்பராஜே தயாரித்துள்ளார். ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி இந்தப் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
 
இப்போதுதான் மனம் வந்து ஒருவழியாக கார்த்திக் சுப்பராஜிற்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் தனுஷ். முழுக்க முழுக்க பாரீனில் ஷூட்டிங் நடைபெறும் இந்தப் படத்தை, சஷிகாந்த் தயாரிக்கிறார். அடுத்த மாதம் ஷூட்டிங் போகலாம் என்கிறார்கள்.
 
இந்நிலையில், திடீரென ரஜினிகாந்தின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. எனவே, இத்தனை மாதங்கள் தன்னைக் காக்கவைத்த தனுஷைக் கழட்டிவிட்டு ரஜினியின் படத்தை இயக்கலாமா? என யோசித்து வருகிறாராம் கார்த்திக் சுப்பராஜ்.