1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: வியாழன், 22 பிப்ரவரி 2018 (17:55 IST)

தனுஷின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா?

தனுஷின் அடுத்த படத்தை இயக்க இருப்பது கார்த்திக் சுப்பராஜ் என்பது உறுதியாகிவிட்டது.
பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி 2’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் தனுஷ். இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். வரலட்சுமி  சரத்குமார், மலையாள நடிகர் டோவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.  தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
 
இதைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. ‘விக்ரம் வேதா’ படத்தைத் தயாரித்த சஷிகாந்த், இந்தப்  படத்தைத் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு முழுவதும் லண்டனில் நடைபெற இருக்கிறது. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது என்கிறார்கள்.
 
தனுஷ் நடிப்பில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் ‘வடசென்னை’ ஆகிய படங்கள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.