திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 4 நவம்பர் 2020 (19:46 IST)

ஆரவ் திருமணத்திற்கு இதனால்தான் வரவில்லை: ஓவியாவின் அதிரடி பதில்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் வின்னரான ஆரவ் திருமணம் சமீபத்தில் நடந்தது என்பதும், இந்த திருமணத்திற்கு பெரும்பாலான பிக்பாஸ் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே 
 
ஆனால் ஓவியா மட்டும் இந்த திருமணத்தில் கலந்து கொள்ளாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியது இந்த நிலையில் தற்போது ஓவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்போது ஒரு ரசிகர் ஆரவ் திருமணத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று கேட்டார் 
 
இதற்கு பதில் கூறிய ஓவியா, ‘ஆரவ் திருமணத்தின் போது நான் கேரளாவில் இருந்தேன். அதனால்தான் என்னால் அந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆரவ் திருமணத்தை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் இருவருக்கும் என்ன இருந்ததோ அது முடிந்து விட்டது. இப்போது அவருக்கு என ஒரு அழகான வாழ்க்கையை தொடங்கி இருக்கிறது. எனவே இனிமேலும் அதைப் பற்றி கேட்க வேண்டாம் என்று கூறியுள்ளார்