திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வியாழன், 17 ஜனவரி 2019 (10:43 IST)

அஜித் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுப்பது ஏன்: சிவா விளக்கம்

அஜித் எந்த ஒரு நிகழ்ச்சி களிலும் கலந்து கொள்ள மாட்டார். அது ஏன் என்பது குறித்து விஸ்வாசம் பட இயக்குனர் சிவா கூறியிருப்பதாவது:


 
"அஜித் சார் ஏர்போர்ட் உள்ளிட்ட சில இடங்களுக்கு செல்லும்போது அவரை பார்க்க கூட்டம் கூடி விடுகிறது. இதனால் யாருக்கும் தொந்தரவு ஏற்படக்கூடாது என்பதே முதல் காரணம். படப்பிடிப்பு நடக்கும்போதே சில சமயங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் படப்பிடிப்பை ரத்து செய்திருக்கிறோம்.
 
அஜித் சார் எனக்கு நண்பர் என்று சொல்லிக்கொள்ள மாட்டேன். அவர் எப்போதும் எனக்கொரு அண்ணன். அவருக்கு எப்போதுமே நான் விஸ்வாசமாக இருப்பேன். என்னுடைய தொழில் மீது அவருக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. அதேபோல அவருடைய தொழில் மீது எனக்கும் மிகப்பெரிய மரியாதை உண்டு. இவ்வளவு பெரிய நடிகர் என்னை நம்பி இத்தனை படங்கள் கொடுக்கிறார் என்றால் அவருக்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன்”
 
இவ்வாறு இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார்.