ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வியாழன், 17 ஜனவரி 2019 (10:38 IST)

விஸ்வாசம் வசூல் எப்படி? உண்மையை உடைத்த விநியோகிஸ்தர் !

ரஜினி நடித்த ’பேட்ட' படத்துடன் வெளியானதால, அஜித்தின் 'விஸ்வாசம்' படத்துடன் வசூல்   குறையுமோ என முதலில் விநியோகஸ்தர்கள் பயந்தார்கள். ஆனால், இரண்டு படங்களுமே இதுவரை நல்ல வசூல் செய்து வருவதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள். 


 
'விஸ்வாசம்' வசூல் எப்படியுள்ளது என்று திருச்சி - தஞ்சாவூர் ஏரியாவில் இப்படத்தின் விநியோகம் செய்துள்ள சக்திவேலன் கூறுகையில்,
 
இப்படத்துக்கு குடும்பம் குடும்பமாக வருவார்கள் பாருங்கள் என பலர் என்னிடம் என்றார்கள். அது தான் இப்போது நடந்திருக்கிறது. 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை தமிழகத்தில் நான் தான் விநியோகம் செய்தேன். அப்படம் எவ்வளவு பெரிய வெற்றி என்பது அனைவருக்குமே தெரியும். அந்த வகையில் ’விஸ்வாசம்’ அஜித் சார் நடித்த 'கடைக்குட்டி சிங்கம்' ஆகப் பார்க்கிறேன். 
 
இதுவரை அஜித் சார் நடிப்பில் வெளியான படங்களின் வசூலை நாள் கணக்காக எடுத்துப் பார்த்தால், அனைத்துமே ஒரே ரேஞ்சில் இருக்கும். இப்படம் ஒவ்வொரு நாளின் வசூலுமே ஏற்றமாக இருக்கிறது. அந்தளவுக்கு மக்களிடையே ஒவ்வொரு நாளும் வரவேற்பு கூடிக் கொண்டே இருக்கிறது. நேற்றும் (ஜனவரி 15), இன்றும் (ஜனவரி 16) பயங்கரமான வரவேற்பாக உள்ளது. அவருடைய நடிப்பில் வந்த படங்களில் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டராக 'விஸ்வாசம்' இருக்கும்.
 
ரஜினி சாருடைய 'பேட்ட' படத்துடன் வந்துள்ளது 'விஸ்வாசம்'. அப்படியிருந்துமே தமிழக வசூலில் ஷேராக 55 கோடி முதல் 60 கோடி வரை வரும் என நம்புகிறேன். நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதைப் பார்க்கையில் 70 கோடி முதல் 80 கோடி வரை ஷேராக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
 
வரும் காலத்தில் சூப்பர் வசூல், மக்களிடையே வரவேற்பு இரண்டும் சேர்த்து 'விஸ்வாசம்' மாதிரி ஒரு படம் பண்ணனும் என்று சொல்வார்கள். அந்தளவுக்கு மக்களுடைய மனதில் படத்தின் கதைகளம் மூலம் குடிகொண்டு விட்டார்கள் அஜித் - சிவா கூட்டணி.
 
எனக்கு இந்த வாரத்தில் நான் போட்ட பணம் வந்துவிட்டது. அடுத்த வாரத்திலிருந்து லாபம் தான். எனக்கு மட்டுமல்ல திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர் என அனைவருமே பயங்கர சந்தோஷத்தில் இருக்கிறோம்.
 
இவ்வாறு சக்திவேலன் தெரிவித்தார்.