பிக்பாஸ்’ வின்னர் இவருதான்? ஏன் டைம் வேஸ்ட் பண்றீங்க…? கேள்வி எழுப்பும் நெட்டிசன்ஸ்

Sinoj| Last Modified செவ்வாய், 12 ஜனவரி 2021 (17:46 IST)

பிக்பாஸ் நிகழ்ச்சி பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் அறிமுகமாகிவிட்டாலும் , தமிழகத்தில் நடிகர் கமல்ஹாசன் தான் இதை தொகுப்பாளராக இன்றும் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்று தெரிந்தபிறகு ஏன் அதை வேஸ்டா பார்க்கிறீர்கள் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொண்ணூறு நாட்களைத் தாண்டி நடந்துகொண்டிருக்கும் பிக்பாஸ்-4 சீசன்
இறுதியை நெருங்கிவிட்டது.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் நேற்று எவிக்ட்டான போட்டியாளர்கள் மீண்டும் சிறப்பு விருந்தினர்களாக உள்ளே நுழைந்தனர். அதில் அர்ச்சனா, நிஷா , ரமேஷ் , ரேகா ஆகியோரை தொடர்ந்து இன்று சம்யுக்தா மற்றும் சுசித்ரா இருவரும் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.


பழைய போட்டியாளர்கள் வீட்டிற்கு வந்ததும் பிக்பாஸ் வீடு கலகலப்பாக மாறியது. இதில் அவரவர் தங்களது நண்பர்களை கட்டியணைந்து நலம் விசாரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆரியை மட்டும் யாரும் கண்டுகொள்ளவே இல்லை. இது ஆடியன்ஸ் மத்தியில் பெரும் விமர்சனமாக பார்க்கப்பட்டு வருகிறது.

இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் வீட்டிற்கு சம்யுக்தா மற்றும் சுசித்ரா வந்துள்ளனர். சம்யுக்தா வந்ததும் பாலாவை கட்டியணைத்து கொஞ்சினார். அதை பார்த்து பாலா கண்கலங்கி அழுது உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன் என கூறினார். அடுத்ததாக வெளியான ப்ரோமோவில் நாம் பெரிதாக எதிர்பார்த்த சனம் ஷெட்டி பிக்பாஸ் வீட்டிற்கு வந்துவிட்டார்.

இதில் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் விருந்தினர்களை ஒரு ஒரு கூட்டமாக சேர்த்துக்கொண்டு புதிய டாஸ்க் விளையாட ரெடியாகின்றனர். அதில் ஆரி பக்கம் ரேகா ,சனம் ஷெட்டி இருக்கின்றனர். இதில் ஆட்கள் பிரிக்கும்போது ஆரியிடம் நக்கலாக பேசிய ரியோவை செம காண்டில் திட்டி விட்டார் ஆரி... பின்னர் இருவரும் மனக்கசப்புடனே மன்னிப்பு கேட்க வீட்டில் புதிய சண்டை ஆரம்பித்துள்ளது.


இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நிறைய பார்வையாளர்கள் இருந்தாலும் இதற்கு எதிராக நிறைய எதிர்ப்பாளர்களும் விமர்சகர்களும் உள்ளனர்.

இந்நிலையில் இன்று நெட்டிசன்ஸ் பிக்பாஸ்-4 சீசனின் உள்ள பங்கேற்பாளர்களில் ஆரி தான் ஜெயிக்கப்போவதாகக் கூறி, முடிவு தெரிந்தபின்னர் ஏன் பிக்பாஸ் பார்க்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆடியன்ஸ் பெரும்பாலானோர் ஆரிக்கு ஓட் செய்துள்ளனர். அதேசமயம் சமீபத்தில் கமல்ஹாசன் பூடகமாக வெற்றியாளர் ஆரி என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :