ஆரி பக்கமே போகாத அர்ச்சனா: அப்படியென்ன கோபம்?

ஆரி பக்கமே போகாத அர்ச்சனா: அப்படியென்ன கோபம்?
siva| Last Modified செவ்வாய், 12 ஜனவரி 2021 (07:41 IST)
ஆரி பக்கமே போகாத அர்ச்சனா: அப்படியென்ன கோபம்?
பிக்பாஸ் நீ வீட்டில் நேற்று எவிக்ட்டான போட்டியாளர்கள் மீண்டும் சிறப்பு விருந்தினர்களாக உள்ளே நுழைந்தனர் என்பது குறித்த செய்தியைப் பார்த்தோம். அர்ச்சனா நிஷா ரமேஷ் மற்றும் ரேகா ஆகிய நால்வரும் வீட்டிற்கு வந்ததும் பிக்பாஸ் வீடு கலகலப்பாக மாறியது என்பதும் குறிப்பாக ’வாத்தி ரெய்ட்ய்’ பாடலுக்கு அனைவரும் நடனம் ஆடிய காட்சியை பார்ப்பதற்கு சுவராசியமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஏற்கனவே ஆரி மீது பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே கடும் கோபத்தில் இருந்த அர்ச்சனா, பிக் பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக வந்த போதிலும் ஆரி பக்கமே திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

அதற்கு பதிலாக ரம்யா ஜெயிக்க வேண்டும் என்று திருஷ்டி சுற்றிப் போட அர்ச்சனா, பாலாஜியிடமும் தூண்டிவிடும் வகையில் பேசினார். ஆரி எப்படியும் இந்த போட்டியில் டைட்டில் வின்னர் ஆக கூடாது என்ற வகையில் அர்ச்சனா செயல்பட்டது, அவர் இன்னும் திருந்தவில்லை என்பதையே காட்டுகிறது என நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்

ஆனால் அதே நேரத்தில் ஆரியிடம் நிஷா மனம் விட்டு பேசினார். நீங்கள் எந்தவித பொறாமையும் இல்லாமல் போட்டியும் இல்லாமல் சரியாக விளையாடுகிறீர்கள் என்றும் அவர் ஆறுதல் கூறினார். அர்ச்சனாவும் நிஷாவும் மிகவும் நெருங்கிய தோழிகளாக இருந்தாலும் ஆரி விஷயத்தில் இருவரும் இருவேறு கருத்துக்களை கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :