1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 27 மே 2020 (21:00 IST)

விஜய்க்கு முன் இளைய தளபதி பட்டத்தை யார் வைத்திருந்தார் தெரியுமா?

விஜய்க்கு முன் இளைய தளபதி பட்டத்தை யார் வைத்திருந்தார் தெரியுமா?
இளைய தளபதி என கடந்த சில வருடங்களுக்கு முன் சொன்னால் அது விஜய் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது இளைதளபதியில் இருந்து அவர் தளபதிக்கு மாறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இளைய தளபதி என்ற பட்டத்தை விஜய்க்கு முன்னரே நடிகர் ஒருவர் தனது படத்தின் டைட்டிலில் போட்டுக் கொண்டது தெரியவந்துள்ளது. கடந்த 1993 ஆம் ஆண்டு வெளிவந்த ’நல்லதே நடக்கும்’ என்ற படத்தில் நடித்த நடிகர் சரவணனுக்கு தான் இளைய தளபதி என்ற பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது இது குறித்து ஏற்கனவே அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் தற்போது புரட்சி தளபதி பட்டத்தை நடிகர் விஷால் வைத்துள்ள நிலையில் இந்தப் பட்டத்தை ஏற்கனவே தற்போது அருண்விஜய்யாக இருக்கும் அருண்குமார் வைத்திருந்தார். கடந்த 1996ல் அருண்விஜய் நடித்த ’பிரியம்’ என்ற படத்தில் அவருக்கு டைட்டிலாக புரட்சித்தளபதி என்று வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது