1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 19 டிசம்பர் 2019 (20:55 IST)

அருண்விஜய்யின் அடுத்த படத்தின் டைட்டில் குறித்த தகவல்!

அஜித்துடன் ’என்னை அறிந்தால்’ என்ற படத்தில் வில்லனாக நடித்த அருண் விஜய், அந்த படத்தில் கிடைத்த மிகப்பெரிய புகழால் தற்போது தமிழ் திரையுலகில் பிஸியான ஒரு கதாநாயகனாக இருந்து வருகிறார். அவர் தற்போது அக்னி சிறகுகள், மாபியா, பாக்சர் மற்றும் சினம் ஆகிய நான்கு படங்களில் நடித்து வருகிறார். இந்த நான்கு படங்களும் 2020 ஆம் ஆண்டு வெளிவரும் என்றும் இந்த படங்கள் ரிலீஸான பிறகு அவர் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்து விடுவார் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் ஈரம் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண்விஜய் நடிக்கும் ஒரு படம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை பெங்களூரு ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தில் அருண் விஜய் ஜோடியாக ரெஜினா நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படத்திற்கு ’ஜிந்தாபாத்’ என்ற டைட்டில் வைக்க இயக்குனர் அறிவழகன் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளிவந்த பின்னரே இந்த டைட்டில் உறுதி செய்யப்படும் என தெரிகிறது
 
ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்த படத்தை ஆல்இன்ஆல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சாம் சிஎஸ் இசையில், ராஜசேகர் ஒளிப்பதிவில், சாபு ஜோசப் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது