1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வெள்ளி, 29 ஜூன் 2018 (21:27 IST)

ரஜினியின் அடுத்த இயக்குநர் யார் தெரியுமா?

ரஜினியின் அடுத்த இயக்குநர் இவர்தான் என கோலிவுட்டே ஒருவரை நோக்கி கைகாட்டுகிறது.
ரஜினி நடிப்பில் சமீபத்தில் ‘காலா’ ரிலீஸானது. அதைத் தொடர்ந்து ‘2.0’ படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்தில், எமி ஜாக்சன் ஹீரோயினாகவும், அக்‌ஷய் குமார் வில்லனாகவும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து வருகிறது.
இதைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார் ரஜினி. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் ஷூட்டிங், டார்ஜிலிங்கில் நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைக்கிறார்.
 
ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க, மகன்களாக பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். சனந்த் ரெட்டியின் ஜோடியாக ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ மேகா ஆகாஷ் நடிக்கிறார். முதல் ஷெட்யூலே 40 நாட்களுக்கு நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், ரஜினியின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கப் போகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது விஜய் நடிப்பில் ‘சர்கார்’ படத்தை இயக்கிவரும் ஏ.ஆர்.முருகதாஸ், அதைத் தொடர்ந்து ரஜினியை இயக்குவார் என்கிறார்கள். இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க இருக்கிறது.