பூஜையுடன் அடுத்த படத்தின் படப்பிடிப்பை துவங்கிய சிவகார்த்திகேயன்

Last Updated: புதன், 27 ஜூன் 2018 (19:05 IST)
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் எஸ்.கே.13 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கி உள்ளது. இதனை 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த படத்தினை 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும்.
பொன்ராம் இயக்கத்தில் `சீமராஜா' படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், அடுத்ததாக `இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில், அந்த படத்திற்கான  படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியருக்கிறது. 
 
இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கிறார். கருணாகரன், யோகி பாபு, இஷா கோபிகர் பானுப்ரியா மற்றும் தொலைக்காட்சி  பிரபலம் கோதண்டம் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலை பணிகளை  மேற்கொள்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படம் உருவாகும் எனவும் கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :