விடாமுயற்சி ஷீட்டிங் எங்கு தெரியுமா?
தமிழ் சினிமவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் துணிவு படத்திற்கு பின் நடிக்கவுள்ள படம் விடாமுயற்சி. இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.
இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியானது. இதற்கிடையே, அஜித்குமார் ஐரோப்பா மற்றும் ஓமனில் பைக் சுற்றுலா மேற்கொண்டு வந்த நிலையில், ஷூட்டிங் எப்போது என்று கூறவில்லை.
இந்த படத்தின் ஷுட்டிங் இம்மாதம் நடக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதற்காக அஜெர்பைஜானுக்கு சென்றுள்ளது விடாமுயற்சி படக்குழு. இப்பட ஷூட்டிங் நாளை தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்னொரு கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க உள்ளதாக தெரிகிறது.