திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 2 அக்டோபர் 2023 (07:53 IST)

மீண்டும் சில நாட்கள் தள்ளிப் போகும் விடாமுயற்சி ஷூட்டிங்!

அஜித் தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் இப்போது கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.  இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் இன்னும் அடுத்த கட்ட பணிகள் நடக்கவில்லை. ஷூட்டிங் எப்போது என்பதும் தெரியவில்லை.

இந்த படத்தின் ஷுட்டிங் அக்டோபர் தொடக்கத்தில் நடக்க உள்ளதாக சொல்லப்பட்டது. இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்னொரு கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அக்டோபர் 2 ஆம் தேதி இன்று அஜெர்பைஜானில் இந்த பட ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்பட்ட நிலையில் இரண்டு நாட்கள் தள்ளி அக்டோபர் நான்காம் தேதி தொடங்கும் என சொல்லப்படுகிறது.