1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 11 மார்ச் 2019 (11:06 IST)

என்னே... ஒரு ஈடுபாடு! வெறித்தனமா தமிழை கத்துக்கிட்ட 'இதய ராணி' !

ரஞ்சித் ஜெயக்கொடி இயத்தில் ஹரிஸ் கல்யாண் நடிப்பில்  "இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்". படம் வரும் மார்ச் 15ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார்.


 
கன்னட பொண்ணான ஷில்பா கன்னடப் பெண் ஆவார். மங்களூரைச் சேர்ந்த அவர். படத்துக்காக வெறித்தனமாக தமிழ் கற்றுக்கொண்டுள்ளார்.
 
நம்மள மாதிரி ஆளுங்க திரையில தெரியிறப்ப நடிப்பு பாதி தான் தெரியும். நம்முடைய குரல் தான் மீதியை காட்டும் என்றும் தத்துவம் சொல்லும் ஷில்பா, அதுக்காகவே தமிழ் பேச கத்துக்கிட்டேன் என்றார்.
 
இவர் ஏற்கனவே நடித்த காளி படத்துல டப்பிங் பேச ஆசைப்பட்டுள்ளார். ஆனால் கிராமத்து படம் என்பதால் எங்க பொண்ணு தப்பு தப்பா தமிழ்பேசிடும்ணு பயந்து டப்பிங்கு பண்ணவேண்டாம்ணு சொல்லிங்களாம், இதனால் நொந்து போய்விட்டார் ஷில்பா.
 
இப்போது தமிழை நன்றாக கற்றுக்கொண்ட ஷில்பா, தமிழ் மொழி உலகத்துலேயே சிறந்த மொழி என்று நெகிழ்கிறார். "உலகத்துல சில நாடுகள் இருக்கு. அங்க எல்லாம், குறிப்பிட்ட நான்கு ஐந்து மொழிகள் தெரிஞ்சா தான் பிழைக்க முடியும்.  அதுல இங்லிஷ் இல்ல, ஆனா தமிழ் இருக்கு. சமஸ்கிருதத்தை விட பழமையான மொழி இது என்று பெருமைப்படுகிறார்... தமிழ் யாரையும் வாழவைக்கும்...தமிழை நேசித்தால் தமிழன் யாரையும் வாழவைப்பான்.  உங்களுக்கு பிரைட் பியூச்சர் இருக்கு ஷில்பா....