திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (10:18 IST)

சிவகார்த்திகேயன் அழுததன் காரணம் இதுதான் – பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்!

சுஷாந்துக்கு நடந்தது போல நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் நெப்போட்டிஸம் பிரச்சனை இருந்ததாக பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டதற்கு பாலிவுட்டில் இருக்கும் வாரிசு நடிகர்களின் ஆதிக்கமே காரணம் என சொல்லப்பட்டது. இதையடுத்து பாலிவுட்டில் நெப்போட்டிஸம் குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. பாலிவுட் போல தமிழ் சினிமாவில் நெப்போட்டிஸ பிரச்சனைகள் இல்லை என சொல்லப்பட்டு வந்துள்ளது.

ஆனால் அதை மறுக்கும் விதமாக லிப்ரா புரொடக்‌ஷன் தயாரிப்பாளர் ரவீந்தரன் கருத்து தெரிவித்துள்ளார். அதில் சுஷாந்துக்கு நடந்ததுதான் சிவகார்த்திகேயனுக்கும் நடந்தது. ஒரு நான்கு வருடங்களுக்கு முன்னர் அவர் பல பிரச்சனைகளை சந்தித்தார். அவர் ஒரு கார் வாங்கினால் கூட அது பலருக்கு பிரச்சனையாக அமைந்தது. அவருக்குப் பல தொல்லைகள் கொடுக்கப்பட்டன. அதனால் தான் அவர் ஒரு நிகழ்ச்சியில் மேடையிலேயே கண்கலங்கி அழுதார்.