புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 5 ஆகஸ்ட் 2020 (15:45 IST)

சுஷாந்த் வழக்கில் உண்மை தெரியவேண்டும் – இத்தனை நாள் அமைதிக்குப் பின் வாய் திறந்த நடிகர்!

சுஷாந்த் மரணத்தின் உண்மை என்ன என்பது அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தெரியவேண்டும் என மூத்த நடிகர் அனுபம் கேர் தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் தனது 34 ஆவது வயதில் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்பதும் இந்த தற்கொலை குறித்து மும்பை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. ஆனால் சுஷாந்தின் மரணத்துக்கு பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியல் மற்றும் அவரது முன்னாள் காதலி கொடுத்த மன அழுத்தம் என பலக் காரணங்கள் சொல்லப்பட்டு வந்தன.

இதனால் வழக்கு விசாரணை ஒழுங்காக நடக்க வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என சுஷாந்தின் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து சுஷாந்தின் சொந்த மாநிலமான பீஹாரின் முதல்வர் நிதிஷ்குமார் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளார்.
இந்நிலையில் சுஷாந்த் தற்கொலை குறித்து பாலிவுட் மூத்த நடிகரான அனுபம் கேர் முதல்முறையாக பேசியுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘சுஷாந்த் மரணம் குறித்து பல விஷயங்கள் பேசப்பட்டு விட்டன.  யார் எந்த பக்கம் நிற்கிறோம் என்பது இனி முக்கியம் அல்ல.  இந்த வழக்கு நல்ல முடிவை எட்டவேண்டும். நான் இவ்வளவு நாள் அமைதியாக இருந்தேன். ஆனால் இப்போது சூழல் தீவிரவாமதை அடுத்து பேசுகிறேன். இன்னமும் வாய்மூடி எதுவும் பேசாமல் இருப்பது நாம் கண்களை மூடிக் கொள்வதற்கு சமம். aஅவரது மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். இதில் யார் குற்றவாளி என்பது கண்டறியப்பட வேண்டும். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் உண்மை தெரியவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.