பிரபல நடிகர் விவேக்கின் தாயார் காலமானார் ! ஏராளமானோர் அஞ்சலி
தமிழ்சினிமாவில் தனக்கென்று தனித்துவமான நகைச்சுவையின் வாயிலாக ஏராளமான பகுத்தறிவுக்கொள்கைகளை பரப்பி, மக்களுக்கு சமூக விழிப்புணர்வை பரப்பியவர் நடிகர் விவேக். என். எஸ் கிருஷணனுக்கு பிறகு மக்களிடையே சமுக விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தியால் இவர் சின்னக்கலைவாணர் என்று அழைக்கப்படுகிறார்.
கடந்த 1990 ஆம் ஆண்டு தொடக்கத்தில் துணை நடிகராக சினிமாவில் அறிமுகமான விவேக் தற்போதும் பிஸியாக நடிகராகவே இருந்துவருகிறார்.
இந்நிலையில் விவேக்கின் தாயார் மணியம்மாள் (86) சென்னையில் வசித்து வந்தார். இன்று மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். இதனையடுத்து திரையுலக நட்சத்திரங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.