வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 3 ஜூன் 2021 (08:58 IST)

விரைவில் துப்பறிவாளன் 2 படத்தை இளையராஜாவுக்கு திரையிடும் விஷால்!

நடிகர் விஷால் துப்பறிவாளன் 2 படத்தை விரைவில் இளையராஜாவுக்கு காத்திருக்க ஆவலாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென விஷால் மற்றும் மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிஷ்கின் படத்தில் இருந்து விலகினார். லண்டனில் நடந்த படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாட்டால் இந்த படத்தில் இருந்து மிஷ்கின் விலகினார். மேற்கொண்டு படத்தை விஷாலே இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த படம் அடுத்த கட்டம் நோக்கி நகரவில்லை.

இந்நிலையில் நேற்று இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு விஷால் வெளியிட்ட டிவீட்டில் ‘நமது மேஸ்ட்ரோவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் தர வேண்டும். உங்களுடன் பணியாற்ற நீண்ட நாட்களாகக் காத்திருந்தேன். ஊரடங்கு துப்பறிவாளன் 2 படத்தின் காட்சிகளை உங்களுக்கு போட்டுக்காட்ட ஆர்வமாக உள்ளேன். ’ எனக் கூறியுள்ளார்.