புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வியாழன், 9 நவம்பர் 2017 (13:13 IST)

விக்ரம் வைக்கும் சஸ்பென்ஸ்

இன்று மாலை 6 மணிக்கு முக்கிய அறிவிப்பு இருப்பதாக சஸ்பென்ஸ் வைத்துள்ளார் நடிகர் விக்ரம்.




உடலளவில் மட்டுமல்ல, மனதளவிலும் இன்னும் யூத்தாகத்தான் இருக்கிறார் விக்ரம். அவர் மகளின் திருமண வரவேற்புக்காக கொட்டும் மழையிலும் வந்த ரசிகர்களுக்காக நன்றி தெரிவித்து ஒரு ஜாலி வீடியோவை வெளியிட்டிருந்தார் விக்ரம். அத்துடன், தன் மகன் த்ருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்க இருப்பதை, இன்ஸ்டாகிராமில் கெஸ்ஸிங் கேமாகப் பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது இன்னொரு கெஸ்ஸிங் கேமைப் பதிவிட்டுள்ளார் விக்ரம். இன்று மாலை 6 மணிக்கு அது என்ன என்று அறிவிக்கப் போகிறார் விக்ரம்.