வயதானவராக நடிக்கிறாரா விக்ரம்?


cauveri manickam| Last Modified திங்கள், 6 நவம்பர் 2017 (16:45 IST)
கெளதம் மேனன் இயக்கிவரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில், வயதானவராக நடிக்கிறார் விக்ரம் என்கிறார்கள்.

 

கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்தப் படத்தில் உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறார் விக்ரம். ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் ஹீரோயின்களாக நடிக்க, சிம்ரன், ராதிகா, டிடி, வம்சி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். துருக்கி, ஜார்ஜியா, ஸ்லோவேனியா உள்ளிட்ட பல வெளிநாடுகளில் இந்தப் படத்தை ஷூட் செய்து வருகிறார் கெளதம் மேனன். இந்தப் படத்தில், 40 வயது கேரக்டரில் நடிக்கிறாராம் விக்ரம். 28 வயதான ரிது வர்மா அவரை எப்படிக் காதலிக்கிறார் என்பதை வித்தியாசமாகச் சொல்லி இருக்கிறார்களாம்.


இதில் மேலும் படிக்கவும் :