செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 23 செப்டம்பர் 2018 (16:51 IST)

விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த விஜயகாந்த் - எதற்கு தெரியுமா?

சர்வதேச சாதனையாளர் விருது பெற்ற நடிகர் விஜய்க்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 
அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் டீசர், டிரைலர் உலக அளவில் சாதனை செய்தது. அதேபோல் வசூலிலும் ரூ.200 கோடியை தாண்டியது.   
 
மெர்சல் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சர்வதேச அளவில் வழங்கப்படும் ஐஏஆர்ஏ விருது விஜய்க்கு அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில்,  கேப்டன் விஜயகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் “சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (IARA) என்ற அமைப்பின் சார்பில், மெர்சல் படத்துக்காக "சிறந்த சர்வதேச நடிகர்" என்ற விருதை வென்ற நடிகர் விஜய் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.