செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 15 ஜூலை 2021 (16:09 IST)

தனுஷுக்கு வில்லனாக ஆசைப்பட்டேன்… ஆனால் நடக்கலை - விஜய் சேதுபதி வருத்தம்!

தமிழ் சினிமாவில் ஈகோ பார்க்காமல் அனைத்து நடிகர்களுடனும் இணைந்து நடிக்கும் பழக்கத்தை தொடங்கி வைத்துள்ளார் விஜய் சேதுபதி.

தென்னிந்தியாவின் மோஸ்ட் வாண்டட் நடிகர் என்றால் இப்போது அது விஜய் சேதுபதிதான். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இந்தியில் இரண்டு படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் இப்போது கமலின் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே ரஜினி, விஜய் ஆகியவர்களோடு நடித்துள்ள நிலையில் இப்போது கமலோடு நடிக்கும் அவரிடம் எப்படி எல்லா நடிகர்களுடனும் உங்களால் சேர்ந்து நடிக்க முடிகிறது என்ற கேள்விக்கு ‘எனக்கு எந்த ஈகோவும் இல்லை. எல்லா நடிகர்களுடனும் நடிக்க ஆசையாக இருக்கிறேன். சில வருடங்களுக்கு முன்னரே மாரி படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடிக்க மாரி படத்தில் சம்மதம் கூறினேன். ஆனால் அப்போது நடக்கவில்லை’ எனக் கூறியுள்ளார்.