ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 15 ஜூலை 2021 (15:43 IST)

இரண்டே நாளில் 19 குழந்தைகளுக்கு கொரோனா: புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரியில் இரண்டே நாட்களில் 19 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இதனை அடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் புதுச்சேரியில் திடீரென கடந்த இரண்டு நாட்களில் ஒரு வயதுக்கு உட்பட்ட 13 குழந்தைகள் உள்பட 19 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களது உடல்நிலை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
இரண்டே நாட்களில் 19 குழந்தைகளுக்கு பரவியுள்ளது புதுச்சேரி மக்கள் மனதில் மூன்றாவது அலை தொடங்கி விட்டதோ என்ற அச்சத்தை ஏற்படுத்திஉள்ளது. ஏற்கனவே மூன்றாவது அலையில் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கும் என்ற தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது