1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 26 ஜூலை 2022 (17:43 IST)

நடிகர் விஜய் - ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம்

Vijay
தமிழ் சினிமாவில் முன்னணி  நடிகர் விஜய், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒரு ஓப்பந்தம் போட்டிருப்பதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி  நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்திற்குப் பிறகு, தற்போது வம்சி இயக்கத்தில், வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை தில் ராஜு தயாரித்து வருகிறார். பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில்,  நடிகர் விஜய்க்கு சென்னை சாலிகிராமத்தில் ஷோபா திருமணம் மண்டபமும் போரூரில் சங்கீதா திருமண்டபம் உள்ளன. இந்த இரு  மண்டபவங்கலை தில்ராஜூ ஒரு ஒப்பந்தம்போட்டு, மாதம் ரூ.7 லட்சம் வாடகை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது.
இந்த   நிலையில் தில் ராஜுவுடனான ஒப்பந்தத்தை விஜய் ரத்து செய்துவிட்டு, ரிலையன்  நிறுவனத்திற்கு இரு மண்டபங்களை கொடுக்க ஒப்பந்தம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதற்காக  நடிகர் விஜய்யின் ‘ஷோபா திருமண  மண்டபமும்’, ‘சங்கீதா திருமண மண்டமும்’ புதுப்பிக்கப்பட்டு வருகிறது.