சினிமாவில் 13 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை ஸ்ருதிஹாசன்
தமிழ் சினிமாவில் 7 ஆம் அறிவு படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். இப்படத்தை அடுத்து, தனுஷுடன்’ 3’, விஜயுடன் ‘புலி’, அஜித்துடன்’ வேதாளம் ‘உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
தற்போது, கேஜிஎப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல்ஸ் பட இயக்குனர் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சினிமாவில் ஸ்ருதிஹாசன் அறிமுகமாகி 13 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். இதுகுறித்து வீடியோ பதிவிட்டுள்ள அவர், நான் சினிமாவில் அறிமுகமாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. என் வாழ் நா'ள் முழுவதும் ரசிகர்களுக்கும், அவர்கள் எனக்கு அளித்துள்ள அன்பிற்கும் எனது பணிவான நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.