விடுதலை 2 படத்தின் நீளத்தால் ஏற்பட்ட குழப்பம்… தியேட்டர் மற்றும் ஓடிடிக்கு தனித்தனி ரிலீஸா?
கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்தது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் தொடங்கி இறுதிகட்டத்தில் உள்ளது.
இரண்டாம் பாகத்தில் சூரிக்குக் காட்சிகள் மிகவும் குறைவு என்பதால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான ஷூட்டிங் சமீபத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட காட்சிகளை வெற்றிமாறன் படமாக்கி வரும் நிலையில் வெற்றிமாறன் முடிவே இல்லாமல் ஷூட்டிங்கை நடத்திக் கொண்டுவருகிறார் என சொல்லப்பட்டது.
இப்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்துவரும் நிலையில் படத்தின் நீளம் எதிர்பார்த்ததை விட அதிகமாகிவிட்டதாம். இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளே நான்கு மணிநேரத்துக்கு மேல் வருகிறதாம். அதனால் தியேட்டருக்கு ஒரு வெர்ஷன் ஓடிடிக்கு ஒரு வெர்ஷன் என்று தனித்தனியாக ரிலீஸ் செய்யும் முடிவில் படக்குழு இருப்பதாக சொல்லப்படுகிறது.