வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (12:33 IST)

அப்பாவின் மனைவியை ’ஆன்ட்டி’ என அழைத்த வரலட்சுமி சரத்குமார்!

அப்பாவின் மனைவியை ’ஆன்ட்டி’ என அழைத்த வரலட்சுமி சரத்குமார்!
நடிகை ராதிகா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு திரையுலகினர் தொடர்ச்சியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். முன்னணி நடிகர், நடிகைகள் முதல் புதுமுக நடிகர்கள் வரை தங்களது சமூக வலைதளங்களில் ராதிகாவுக்கு வாழ்த்து கூறி வருவதால் அவரது பிறந்த நாள் குறித்த ஹாஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நடிகை வரலட்சுமி, நடிகை ராதிகாவுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார். ராதிகா அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் அடுத்த தலைமுறை நடிகர் நடிகர்களுக்கு ஒரு உத்வேகமாவும் வழிகாட்டியாகவும் இருந்து உள்ளார் 
 
அவரது நடிப்பில் மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. என்னுடைய வாழ்வில் மிகச் சிறந்த ஒரு நபர் என்றால் அது ராதிகா அவர்கள் தான். அவர் மீது நான் மிகுந்த அன்பு வைத்துள்ளேன் ராதிகா ’ஆன்ட்டி’ அவர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார் 
 
வரலட்சுமியின் தந்தையான சரத்குமாரின் மனைவி தான் ராதிகா என்பதும், அப்பாவின் மனைவியான ராதிகாவை அம்மா அல்லது சித்தி என்று அழைக்காமல் ஆன்ட்டி என வரலட்சுமி அழைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது