திருமாவளவன் தீட்டிய அரிவாள் தென்னவர் சுழற்றியதே: வைரமுத்து!
இந்துமத பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்களை பாஜகவினர் மற்றும் இந்து மத அமைப்பினர் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
ஆனால் அதே நேரத்தில் திருமாவளவன் பேசியதை திரித்துக் கூறி வேண்டும் என்றே பிரச்சனையை எழுப்புகின்றனர் என திருமாவளவனுக்கு ஆதரவாக கூட்டணி கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் சற்று முன்னர் தனது சமூக வலைத்தளத்தில் கவியரசு வைரமுத்து அவர்கள் திருமாவளவனுக்கு ஆதரவாக கவிதை வடிவில் ஒரு பதிவு செய்துள்ளார். அந்த டுவீட்டில் அவர் கூறியிருப்பதாவது:
திருமா வளவன் தீட்டிய அரிவாள்
தென்னவர் சுழற்றியதே - அவன்
அரிமா போலே ஆர்த்த கருத்தும்
அரிவையர் வாழ்வதற்கே – அதை
அறிந்தும் சிலபேர் அழிம்பு புரிவது
அரசியல் செய்வதற்கே – நாம்
நெறியின் வழியே நீண்டு நடப்பது
நீதி நிலைப்பதற்கே