செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 4 ஜூலை 2023 (15:29 IST)

சென்னையில் TTF வாசன் கார் மோதி காயமடைந்த நபர்.. அண்ணாநகர் போலீஸார் வழக்குப் பதிவு!

யூடியூபர் டிடிஎஃப் வாசன் அதிவேகமாக மோட்டார் பைக் ஓட்டி அதை வீடியோவாக எடுத்து போட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர். அதிலும் அவர் வீடியோக்களில் வேகமாக பைக் ஓட்டுவது, கையைவிட்டு, ஓட்டுவது, விபத்து ஏற்படும்படி வாகனங்களை இயக்குவதாக சமீபத்தில் இவர் மீது புகார் எழுந்தது.

இதையடுத்து இவரை சில முறை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதனால் மேலும் சர்ச்சையில் அவர் சிக்கினாலும் இளைஞர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இந்நிலையில் இன்று அவரின் கார்மோதி சென்னை சூளைமேட்டை அடுத்து உள்ள நெல்சன் மாணிக்கம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் காயமடைந்துள்ளார். இதையடுத்து TTF வாசன் மீது அண்ணாநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் வாசன் நடிக்கும் மஞ்சள் வீரன் என்ற படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.