வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 26 ஜூன் 2023 (17:53 IST)

சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் டிடிஎஃப் வாசன்

ttf vasan
யூடியூபர் டிடிஎஃப் வாசன் பிறந்த நாளன்று அவர் நடித்து வரும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

யூடியூபர் டிடிஎஃப் வாசன் வாகனத்தை வேகமாக ஓட்டுவது, கையைவிட்டு, ஓட்டுவது, விபத்து ஏற்படும்படி வாகனங்களை இயக்குவதாக சமீபத்தில் இவர் மீது புகார் எழுந்தது.

இந்தப் புகாரின் அடிப்படையில் அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதன் பின்னர் ஜாமீன் விடுவிக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து, தனியார் யூடியூப் சேனல் செய்தியாளர் ஒருவரை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கோவை காரமடை காவல் நிலையத்தில் இரு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வரும்  யூடியூபர் டிடிஎஃப் வாசன் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்.  இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் அவரது பிறந்த நாளான வரும் 29 ஆம் தேதி  வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.