சிம்பு வெளியிட்ட Love Failure திரைப்படத்தில் டிரைலர்
தேவதாஸ் பிரதர்ஸ் இயக்கத்தில், துருவ், ஷில்பா மஞ்சுநாட் சஞ்சிதா ஷெட்டி, அஜய் பிரசாத், பாலசரவணன் , மெட்ராஸ் ஜானி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் லவ் ஃபெயிலியர்.
இப்படத்தை எட்சட்ரா நிறுவனம் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ளார். இப்படத்தின் டிரெயிலரை நடிகர் சிம்பு இன்று வெளியிட்டுள்ளார்.
மேலும், இப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு வெளியாகும் என தெரிகிறது. இளைஞர்களின் வெகுவான ஆதரவைப் பெற்று ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ள சிம்பு இப்படத்தில் சிறப்புப் தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.