செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 1 ஜூன் 2020 (07:21 IST)

OTT ரிலிஸுக்கு அடுத்த படமும் தயார் – அட்லி எடுத்த அதிரடி முடிவு!

தமிழில் இப்போது நேரடியாக படங்கள் OTT பிளாட்பார்ம்களில் ரிலிஸாவது அதிகமாகியுள்ளது. அந்த வகையில் அட்லி தயாரித்துள்ள அந்தகாரம் திரைப்படமும் நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.

இயக்குனர் அட்லி தயாரிப்பில் சுசி சித்தார்த் இயக்கியுள்ள திரைப்படம் 'அந்தகாரம்'.. இந்த படத்தில் வினோத் கிஷன் மற்றும் கைதி புகழ் அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர் ஆகியவை வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த தயாராகி இருந்த படம் ரிலீஸாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், எப்போது மீண்டும் திரையரங்குகள் திறக்கப்படும் என்ற கேள்வியும், அப்படியே திறந்தாலும் மக்கள் வருவாரகளா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்நிலையில் பொன்மகள் வந்தாள் திரைப்படம் OTTல் நேரடியாக ரிலிஸ் நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து, இப்போது இந்த படமும் நேரடியாக நெட்பிளிக்ஸில் ரிலிஸ் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

OTT ரிலீஸ் காரணமாக தமிழ் சினிமாவில் பல சச்சரவுகள் ஏற்பட்டாலும், தொடர்ந்து படங்கள் ரிலிஸ் ஆவது அதிகரித்துள்ளது.