புதன், 13 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: திங்கள், 9 செப்டம்பர் 2024 (09:59 IST)

டிராக் மாறும் நடிகர் ரஹ்மான் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கும் "பேட்பாய்ஸ்"

தமிழ்,மலையாளம்,தெலுங்கு,இந்தி மொழிகள் உட்பட 200க்கும் மேலான படங்களில் ஹீரோவாக நடித்த ரஹ்மான்,
இப்பொழுது நடித்து வெளிவரவிருக்கும் படம் #பேட்பாய்ஸ். காதல்,செண்டிமெண்ட்,ஆக்‌ஷன் கேரக்டர்களில் நடித்திருந்தாலும், காமடியோடு கலந்த ஆக்‌ஷன் கேரக்டரில் இதுவே முதல் தடவையாக இதில் நடித்திருப்பது சிறப்பு. 
 
தனது வழக்கமான கேரக்டரிலிருந்து மாற்றி நடித்த இப்பட டிரைய்லர் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் செப்டம்பர் 13ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். 
 
எவர்கிரீன் நடிகர் 
ரஹ்மான் இப்படம் பற்றி கூறியதாவது......
 
“பேட் பாய்ஸ்”  - பல ஆண்டுகளுக்கு பிறகு நகைச்சுவை டிராக்கில் நான் மிகவும் ரசித்து ரிலாக்ஸாக நடித்த படம். கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக சீரியஸ் வேடங்களில் நடித்து அலுத்து போன வேளையில் தான் டைரக்டர் ஓமர் இந்த கதையை என்னிடம் சொன்னார். அவரும் எழுத்தாளர் சாரங்கும் கதை சொல்லும் போதே நான் சிரித்து..சிரித்து கொண்டேதான்  கேட்டேன். வயது பாரமட்சம் இல்லாமல் நம் மனதில் ஒரு சிறுபிள்ளைத்தனம், குழந்தைத்தனம் ,ஒரு ஹீரோயிசம் இருக்கும். 
 
இது எல்லோரது மனதிலும் இருக்கும். அப்படி ஒரு கனவு உலகில் வாழ்பவர் தான் ஆண்டப்பன் என்ற ஹீரோ கேரக்டர். அவனுக்கு படிப்பு கிடையாது. ஆனால் மனதில் நிறைய அன்பு இருக்கிறது. எல்லோருக்கும் உதவுவான் என்பது தான் அவனது ஒரே தகுதி. இது வரை நான் நடித்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வேடம். வித்தியாசமான body language, appearance, activities எல்லாம் ஆண்டப்பனுக்கு தான். இந்த கதையும் கதாபாத்திரமும் எனக்கொரு change ஆக அமைந்துள்ளது.என்ன நம்பிக்கையில் ஓமர் இந்த ஹீரோ கேரக்டருக்காக என்னை தேர்ந்து எடுத்தார் என்பது வியப்பாக உள்ளது. ஏனெனில் நான் இது நாள் வரை இப்படி ஒரு முழு நீள நகைச்சுவை படமோ, கதாபாத்திரமோ செய்ததில்லை. இதுவரை நடித்த மற்ற சினிமாக்களை விட மிகவும் ரிலாக்ஸாக இதில் நடித்தேன்.
 
எல்லோரையும் கவரும் ஒரு ஃபன் மூவி... இனி மேல் இது போன்ற காமடி கதைகளில் நடிக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம்... பேட் பாய்ஸ் மனதுக்கு மிகவும் நிறைவாக உள்ளது.... எல்லோரும் குடும்பத்துடன் ரசிக்க வேண்டிய படம் என்றார்.