1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (15:52 IST)

நகைச்சுவை நடிகர் விஸ்வேஷ்வர ராவ் மறைவு

visweswara rao comedy actor
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஸ்வேஸ்வர ராவ். இவர் தன் 6 வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வருவதாக கூறப்படும்  நிலையில் இவர் 350க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
 
தமிழ் சினிமாவில் பாலாவின் இயக்கத்தில் விக்ரம் சூர்யா நடிப்பில் வெளியான பிதாமகன் படத்தில் லைலாவின் அப்பாவாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
 
இவர், நடிகராக மட்டுமின்றி, இயக்குனர், தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
 
சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த  விஸ்வேஸ்வர ராவ் இன்று சென்னை சிறுசேரியில் உள்ள தன் இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 62 ஆகும்.
 
அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என தகவல் வெளியாகிறது.
 
அவர்து மறைவுக்கு சினிமாத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்ற்னர்.