வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வெள்ளி, 17 நவம்பர் 2017 (12:07 IST)

சூட்டைக் கிளப்பும் ‘திருட்டுப்பயலே 2’ டிரெய்லர் இன்று ரிலீஸ்

அமலா பால் நடித்துள்ள ‘திருட்டுப்பயலே 2’ படத்தின் டிரெய்லர், இன்று மாலை ரிலீஸாகிறது.




சுசி கணேசன் இயக்கத்தில் பிரசன்னா, அமலா பால், பாபி சிம்ஹா நடித்துள்ள படம் ‘திருட்டுப்பயலே 2’. சனம் ஷெட்டி, விவேக், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசையமைத்துள்ள இந்தப் படத்தை. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்தே, இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது. காரணம், அமலா பாலின் கவர்ச்சியான போஸ்தான். அடுத்தடுத்த போஸ்டர்களிலும் அது தொடர, படம் எப்போது ரிலீஸாகும் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர் இளைஞர்கள்.
இந்நிலையில், படத்தின் டீஸர் இன்று மாலை ரிலீஸாகிறது. சூட்டைக் கிளப்ப இருக்கும் இந்தப் படத்தின் டீஸருக்காக இப்போதே ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.