’ரஜினி ’ பட வில்லன் நடித்த தொடருக்கு ’உயரிய விருது’ !
உலகில் உள்ள சிறந்த தொலைக்காட்சித் தொடர்களை தேர்வு செய்து எம்மின் விருது வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க நாட்டில் நடைபெறும். இந்நிலையில் இவ்வருடம் 47 வது சர்வதேச எம்மி விருது வழங்மும் விழா நடைபெற்றது.
அதில், இந்தியாவில் தயாரான வெப் சீரீஸ்களான ’லஸ்ட் ஸ்டோரீஸ் ’மற்றும், ’சீக்கிரெட் கேம்ஸ் ’ஆகிய இரண்டு தொடர்களும் பரிந்துரைக்கபட்டன.
இதில், இந்தியா சார்பில், பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த நவாசுதீன் சித்திக் , அனுராக் காஸ்யப், ராதிகா ஆப்தே , கரன் ஜோகர் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
ஆனா,இந்தியவில் தயாரான தொடருக்கு விருதுகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட இந்தப் போட்டியில் பரிந்துரைப்பட்டதே பெருமைப்படத்தக்கதாகும்.
மேலும், நடிகை ராதிகா ஆப்தே சிறந்த நடிகைக்கான விருதில் நாமினேட் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.