செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 22 நவம்பர் 2019 (13:03 IST)

பேட்டிங் தேர்வு செய்த வங்கதேசம்! இரவு – பகல் ஆட்டம் ஆரம்பம்!

இந்தியா – வங்கதேசத்துக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தியா – வங்கதேசம் இடையே டி20 மற்றும் டெஸ்ட் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. மூன்று சுற்றுகள் கொண்ட டி20 தொடரில் முதல் சுற்றில் இந்தியா தோல்வியை தழுவினாலும், அடுத்த இரண்டு சுற்றுகளில் கவனமாக ஆடி வெற்றியை கைப்பற்றியது.

பிறகு நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியிலும் முதல் இன்னிங்ஸிலேயே வெற்றி பெற்றது இந்தியா. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி சிறு மாற்றங்களுடன் பகல் – இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. மேலும் இதில் வழக்கமான வெள்ளை பந்துக்கு பதிலாக பிங்க் நிற பந்து பயன்படுத்தப்படுகிறது. இதனால் போட்டியை காண ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் டாஸ் வென்றுள்ள வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஆரம்பமே பேட்டிங்கில் தொடங்கினால் காலை நேரத்திலேயே முடித்துவிட்டு இரவில் பந்துவீச்சில் ஈடுபடலாம் என வங்கதேசம் யூகித்திருப்பதாக தெரிகிறது. இரவு நேரத்தில் ஏற்படும் களைப்புடன் விளையாடுவது இரு அணிகளுக்குமே சிரமமாக இருக்க போகிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த தடைகளை மீறி யார் வெற்றி பெறுவார்கள் என்பதே எதிர்பார்ப்பாக இருக்கிறது.